வழக்கம் போல
ஊழல் செய்தியும்
புலனாய்வு படையெடுப்பும்
அமலாக்க பிரிவின் ஆய்வும் - அலுப்போடு
படித்துக்கொண்டிருந்த என்னை;
அதிரவைத்தது சென்ற வார
ரிபோர்ட்டர் இதழ்...
அந்த வலியின் குமுறல் இதோ...
தமிழ்நாட்டில்
எத்தனையோ மக்கள் விரோத செயல்களை
மாறி மாறி செய்த நம் மாநில அரசுகள்?
நீண்டகாலமாய் நம் மொழிக்கு
செய்திட்ட துரோகம்தான் அது...
தன்னை தமிழுக்கும் தமிழனக்கும் அற்பணித்ததாய்
சொல்லிக்கொள்ளும் தமிழின தலைவர்
கலைஞர் ஆட்சியிலும் இதற்கொரு தீர்வு
காணப்படவில்லை என்பதே என் வாதம்..
ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற
பிற பாடங்களுக்கு அவ்வபோது
ஆசிரியர்களை பணியமர்த்துகிற இவர்கள்...
"1989ம் ஆண்டு முதல் இன்றுவரை
தமிழ் பாடத்திற்கு மட்டும்
ஆசிரியர்களை பணியமர்த்தவே இல்லை"
சுமார் 6700 ஆசிரியர்கள் தேவை என
அரசுக்கு பரிந்துரை செய்தபோதும்!!!
இருபத்தைந்தாயிரம் தமிழ் படித்த ஆசிரியர்கள்
தமிழகத்தில் இருக்கும்போதும்!!!
இதுவரை மூன்று பேர்
தற்கொலை செய்துள்ள நிலையிலும்!!!
கல்வித்துறையும், கழக ஆட்சியையும்
கண்டுகொள்ளாதது ஏன்?
மாயவரம் நகராட்சி மேல்நிலை பள்ளியில்
பதினொன்றாம், பன்னிரெண்டாம்;
வகுப்பு படிக்கையிலே எங்கள் தமிழாசிரியர்
வாரம் ஒருமுறைதான் வகுப்பறைக்கே வருவார்...
பிறகெப்படி தமிழ் வளரும்?
சினிமாவுக்கு தமிழ் பெயர் வைத்தால்;
தமிழ் வளருமா?
சிறார்களுக்கு சொல்லித்தந்தால் வளருமா?
முன்னூறு கோடி செலவு செய்து;
முட்டு சந்தெல்லாம் போஸ்டர் வைத்து;
முட்டை பிரியாணி போட்டால் வளருமா?
மொழியின் சிறப்பறிந்த பாவலர் பெருமக்கள்;
பாடம் நடத்தினால் வளருமா?
மொழிக்காக எதுவுமே செய்யாமல்...
தமிழ்...
தமிழன்...
தமிழினம்...
தமிழ்நாடு...
தமிழ்த்திமிர்...
என தமிழனை முட்டாளாக்கும்
தமிழினத்தலைவருக்கு...
தமிழ்த் துரோகி எனும் பட்டமளித்து
ஒரு விழாவும் நடத்தலாமென நினைக்கிறேன்...
"தமிழ் இனி மெல்ல சாகும்" என
அந்த முன்டாசுப்புலவன் சொன்னது...
இதையெல்லாம் எண்ணித்தானோ?
எவர்கள் வந்தாலும் இந்த நிலைமைதான். என்ன செய்ய,
ReplyDeleteதமிழ் படித்தவன் நிலைமையெல்லாம்
ReplyDeleteததிங்கினத்தோம் தான்...
இந்த லட்சணத்துல பொறியியலும்
மருத்துவமும் தமிழிலேயே படிக்கணுமாம்...
படிச்சிட்டு பல்லாங்குழி ஆடிகிட்டு...
இவங்க குடுக்கிற ஒன்னுத்துக்கும் ஒதவாத;
ஊக்கத்தொகை வாங்குறதுக்கா?