Tuesday, 30 November 2010

வைரம் பாஞ்ச கட்ட...


மறக்கமுடியாத ஆள் - யாரும்
மறுக்கமுடியாத உண்மை...
சபரிமலை செல்வோர் சிலர் - இவரை
சட்டென சொல்லிடுவர்...
ஐயனை தரிசித்து - வரும்வழியில்
பையினை நிரப்புகையில்...
கழுதை பாதை - ஓரம்
கடை விரிச்சு காத்திருப்பார்...
ஹிந்து; மலையாள மனோரமா - என 
நீளும் பத்திரிக்கை விமர்சனங்கள்...
மலைவாழை; காட்டு மஞ்சள் - எனப்பல 
மூலிகைகள் சூழ்ந்திருக்க நடுவிலே வீற்றிருப்பார்...
இந்த ரெண்டு வெதைய எடுத்து
தேனுல கொழச்சி;
பாலோட செத்து குடிச்சா என்று - அவர்
சொல்லும்போதே சுவைக்க தோணும்...
பெரியவர்தானே!!!
கொடுக்கிற காச வாங்கிப்பார்னு மட்டும் நெனக்காதீங்க...
காசு விஷயத்துல ரொம்ப கறாரான பேர்வழி...
பத்துரூபா கொறஞ்சாலும்...
பொயிட்டுவா தம்பின்னு சொல்லிடுவார்...
ஆனாலும் அவர் ஒரு ஆச்சரியமே!!! 
இத்தனை வயசுலயும் - இவர் எப்படி
இவ்வளவு சுறுசுறுப்பா?
இந்த வருஷம் போகும்போது - அவருடன்
ஒரு புகைப்படம் எடுத்துக்கணும்...

No comments:

Post a Comment