Saturday, 27 November 2010

புயல் எச்சரிக்கை... வாங்க ஓடுவோம்...


பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...
அரசியல்
ஊடகம்
கேபிள் டிவி 
இப்படி பல திசைகளில் சுற்றி சுழன்றடித்த...
கலைஞர் குடும்பப்புயல் - தற்பொழுது
தமிழ் சினிமாவை தகர்த்து கொண்டிருக்கிறது...
அது மேலும் வலுவடைந்து - கோடம்பாக்கத்தில்
குடிகொள்ளுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சினிமா எடுக்க - யாரும்
வடபழனி பக்கம் வரவேண்டாம் என்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்...
குறிப்பாக!
தயாரிப்பாளர்கள்...
விநியோகஸ்த்தர்கள்... 
திரையரங்க உரிமையாளர்கள்...
நடிகர்கள்; இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள்...
என எல்லோருக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மீறி செல்வோர்!
சன் பிக்சர்ஸ்...
ரெட் ஜியன்ட்...
க்ளவுட் நைன்...
மேனகா மூவீஸ்...
வேதா மூவீஸ்...
முதலிய பெரலைகளுக்குள் - புதைந்து போவீர்கள்
என்று எச்சரிக்கப்படுகிறார்கள்...
இது ஒருபுறமிருக்க...
டப்பிங், எடிட்டிங், கிராபிக்ஸ், DI என்று சொல்லகூடிய
படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைக்கு...
இவர்கள் கொடுப்பதே விலை...
இடைமறித்தால்?
கடைவிரிக்கமுடியாது....
பொழப்பு பிச்சைதான்...
திரையுலக ஜாம்பவான்களே...
கொஞ்சம் பொறுங்கள்
இன்னும் கொஞ்ச நாள்ல
தேர்தல் வரும் - ஆட்சியில
அம்மா வரும் - அடுத்தது இவங்களுக்கு
ஆப்பு வரும்...
என்ன பண்றது வேற வழி...
"பணைமரத்துல பாம்பு இருக்குமேன்னு - பயந்து
தென்னைமரத்துல ஏறினால்...
தேள் கொட்டுது"
அய்யாவ விட்டா அம்மா!!!
அம்மாவ விட்டா அய்யா!!!
என்ன ஒரு பொழப்பு...
வாங்க எல்லாரும் திரும்ப வெவசாயம் பாக்க போவும்...

2 comments:

  1. அட பாவிகளா நா வேற கதையோட வெயிட் பண்ணிட்டு இருக்கேன் எல்லாருக்கும் ஆப்பு வசீன்களோ இல்லையோ எனக்கு பெரிய தோப்பு வச்சிட்டீங்க பா வோங்கல ஏன் கடைசி காலம் வரைக்கும் மறக்க மாட்டேன் டா ...........

    ReplyDelete
  2. நன்றி மச்சான்...
    நன்பேண்டா.........

    ReplyDelete