Thursday, 25 November 2010

முந்தைய தலைமுறை...

நாங்கல்லாம் அந்த காலத்துல...
இப்படித்தான் ஆரம்பிக்கும் எல்லா பெருசும் -வாயில
வெத்தல பாக்கு போட்டுக்கிட்டு... 
என்னதான் சொல்லப்போறாங்கன்னு பாத்தா?
ஓடி ஆடி வெளையாண்டது...
உக்காந்து ஒரம் போட்டது...
கிழிஞ்ச டிராயர் போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போனது...
சிமிலி வெளக்கு வெளிச்சத்தில் படிச்சது...
அண்ணன் தம்பிக்காக விட்டுக்கொடுத்தது...
அடி வயிறு கிள்ளும்போது ஈரத்துணி கட்டினது...
தன் வாழ்க்கையில் நடந்த
நல்லதையும் கேட்டதையும்...
நாம் கேட்க தயாராக இல்லாதபோதும் - சொல்லியே தீரும்...
அப்ப நாம நெனப்போம்!
பெருசுக்கு பொழுதுபோகாம...
நம்மள போட்டு கொல்லுதுன்னு...
ஆனால்................
அந்த புலம்பலுக்குபின்னால் - ஒரு பூப்பாதை உண்டு 
நம் கால்கள் புண்படாமல் போவதற்கு...
சொல்லிய கதைகள் அனைத்துமே - நாம்
சோர்வடையாமல் செல்வதற்கு...
நம் முன்னோர்கள் பட்ட இன்னல்கள் எண்ணி - வாழ்வில்
முன்னேரிப்போவதற்கு...
ஆகவே...
உங்களிடம் 
பெருசுகள் புலம்பினால்?
பெரும்புதையல் நிச்சயம்...
ரெண்டு வார்த்தை பேசிவிட்டுத்தான் போவோமே!!!
கண்டிப்பாக...
நம் தலைமுறையோடு
முடிந்துவிடும் - இந்த
புலம்பலும்; போதனையும்... 
அடுத்த தலைமுறைக்கு சொல்லவும் ஆளில்லை...
நின்று கேட்கவும் நேரமில்லை...

2 comments:

  1. Idhoda script writer yaarunga dhayavu seidhu sollungalaen.... persunga kulla ippdi oru nalla yennam irukkum-nu theriyama na kanda padi vanjirukaen.. perusunga samudhayathukku yennudaiya kodana kodi mannippu...

    ReplyDelete
  2. கருத்து தெரிவித்தமைக்கு நன்றி அசோக்...

    ReplyDelete