Monday, 22 November 2010

ஆடியபாதம்...

அவர்தான் எங்கள்
தமிழ் ஐயா...
தமிழென்னும் சலங்கைகட்டி
தனக்கென்ற பாணியிலே
தரைபடாமல் ஆடியபாதம்...
தேமாவும், புளிமாவும்,
அணி வகையும், 
திருக்குறளும்,
அவைபொருளும்...
திகட்டாமல் விருந்தளிப்பார் - கணீர்குரலில்...
ஐம்பெரும் காப்பியம்,
அகநானூறு, புறநானூறு
எட்டுத்தொகை, பத்துபாட்டென...
தலையில்
தட்டியே சொல்லித்தருவார் - அந்த
தடித்த மீசைக்காரர்...
நேர்கொண்ட பார்வையும்,
நிமிர்ந்த நடையும்,
முறுக்கிய மீசையும் - நன்கு
மழித்த கன்னமும்...
ஓங்கிய குரலும்
வெள்ளை உடையும்
எப்போதும் எளிமையுமென - அப்படியே
மனதில் நின்றார்...
அவர் நடத்திய பாடம்போல.
எப்போதுமே ஹீரோதான் அவர்...
விடைத்தாள் தருகையில் மட்டும் வில்லனாக காட்சிதருவார்...
இவரும் சராசரி என்றே நினைத்துவிட்டேன் - சிறுவன்தானே நான்.
எட்டாம் வகுப்பு படிக்கையிலே
தமிழ் மன்றத்தேர்வு...
காய்ச்சல் எனக்கு - இது தேர்வு காய்ச்சலல்ல...
எல்லோரும் வந்திருக்க - என்னை தேடியவர்
தன் மிதிவண்டி தந்து
என் நண்பனை அனுப்பிவிட்டார் வீட்டிற்கே...
ஐயாவே ஆளனுப்ப
புறப்பட்டேன் பரிட்ச்சைக்கு...
எழுதவும் செய்தேன் - அவருடைய பேனாவிலேயே...
எத்தணை பேருக்கு கிடைக்குமோ அந்த வாய்ப்பு?
என்னை பொறுத்தவரை அது வாய்ப்பல்ல - வரமே!!!
வருடங்கள் ஓடின...
வயதும் ஆனது...
காலத்தின் கட்டளை - அம்மாமனிதனை
மீண்டும் சந்திக்க...
பேருந்திலே பார்த்தேன்
ஐயா நலமா என்றேன்?
சற்று நெருங்கிவந்தே இணம்கண்டார் - நான்தான் என்று
ஏ... சோழியவிளாகத்து கெடா...
இப்படித்தான் எனை அழைப்பார் - மகிழ்ச்சியில் இருக்கையிலே...
இன்றோ...
மங்கிய பார்வை...
தொங்கிய தோள்கள்...
குன்றிய குரல் என வயோதிகனாய் காட்சிதந்தது - என் தமிழ்...
அப்போதுதான் சொல்லநினைத்தேன்
"வணக்கம் ஐயா..."என்று
பள்ளியில் எழுந்து நின்று சொன்னதுபோல...
--------------------------------------------------------------
உனக்கல்லவா சொல்லவேண்டும்
என் முதல் வணக்கம்...
இந்த காட்டானையும் கிறுக்கவைத்த - தமிழ்க்
கடவுளல்லவா நீ எனக்கு...
உன் பொர்ப்பாத கமலங்களில் - என்
படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்...

3 comments:

  1. அட இத படிகிரவரைளும் நல்லா தான் இருந்தேன்.... இப்போ எங்க வாத்தியார் நெனப்பு வந்துடிச்சி...... நா நிறைய தடவ பத்து காசு மண்டையன்,,, ஐஞ்சு காசு மண்டையன்நு கிண்டல் பண்ணிருகேன் ஆனா இப்போ ரொம்ப வருத்த படுறேன்.... இனி அவுங்கள பாக்க சான்ஸ் கிடைகாது கிடைத்தால் அவுங்க கிட்ட ஒரு டவுட் கேகணும்....? இப்போ யாரவது அப்படி கூபிடுரான்களாநு.......... ஹா .....ஹா.....ஹா ......

    ReplyDelete
  2. கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி...
    விமர்சனங்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  3. இன்று தமிழில் யாராவது தவறுதலாக இலக்கணம் சொல்லும் போது , அதை திருத்தி விட்டு "தமிழ் அய்யா"வை நினைவு கூற இதுநாள் வரை மறந்தது இல்லை....தமிழுக்கே உரிய கணீர் என்ற குரல் இன்றும் என் காதில் ஒலிக்கிறது..கவிதை மிக அருமை ..அதன் பெருமை உங்கள் தமிழ் அய்யாவிற்கு

    ReplyDelete