Friday, 19 November 2010

NH.45... ஒரு பயணம்...

எப்ப ஊருக்கு கெளம்பினாலும்  
நம்ம பொழப்பு நாரிதாங்க போகும்...
கோயம்பேட்டுல பஸ் புடிக்கிறதுகுள்ளேயே
குற்றுயிரும் குலையுயிருமா ஆயிடுவோம்...
மிச்ச உயிர் எதுவரைக்கும்னு கேளுங்க?
மறைமலைநகர் தாண்டும்வரை தாங்கும்...
அப்பறம் அப்பன் ஆத்தா பண்ண புன்னியத்துல அப்படியே போகுமுங்க...
டிராபிக் ஜாம், கூட்டநெரிசல், கசகசப்பு இதுக்கெடையில வீட்டுலேந்து போன் - எப்பவருவ?
சரி ஜனநாயக நாட்டுல இதெல்லாம் சகஜமுன்னு பாத்தா...
பக்கத்ல இருக்குறவன் கொரியன் செட்டுல - அப்பதான் 
கேர்ள் பிரண்டுகிட்ட லவுடு ஸ்பீக்கர்ல பேசுவான்...
ஒரு மனுஷனோட பொறுமைய இதுக்குமேல சோதிக்க முடியாது...
ஒட்டுமொத்த பிரச்னையும் சமாளிக்க - வோட்கா 
ரெண்டு ரவுண்டு தேவைப்படும்...
எப்படா எறக்கிவிடுவீங்கன்னு யோசிக்கும்போது - ஓரங்கட்டுவாங்க 
விக்கிரவாண்டியில...
அந்த ஹோட்டல்ல அப்ப போடுவாங்க பாருங்க பாட்டு..... அடடா 
------------------------
"ஏ பையா குடிகாரா சாராயத்த குடிக்காதடா...
சாரயத்த குடிச்சிபுட்டு கொடலு வெந்து சாகாதடா...  
அன்டா குன்டா அடகு வச்சி சாராயத்த குடிக்கிறியே...
அதுவும் இல்லையின்னா பொண்டாட்டிய அடிக்கிறியே..." (ஏ பையா) 
-----------------------------
இன்னொன்னு இருக்கு கேளுங்க அதுதான் நம்ம பாட்டு...  
"அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மக எழுதும் கடிதம்...
ஏதோ நானும் இருக்கிறேன்... உருப்படியா படிக்கிறேன்...
யாருமில்ல நமக்கு - நீ எப்படிருகன்னு நெனைக்கிறேன்...
பள்ளிகொடம் செக்கனுன்னு பாத்திரத்த வித்திங்களே?
அம்மா... எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுறேன்...
புத்தக நோட்டு வாங்கா பணம் அனுப்புறேன்னு சொன்னிங்களே?
அம்மா... பாத்திரம் தேச்ச வீட்டுல இன்னும் பணம் கொடுக்கலையா?
புத்தக நோட்டு வாங்கலன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்...
வாங்கிகொடுத்த பேனாவும் ஒடஞ்சி எரவ வாங்கி எழுதுறேன்..."
யோசிக்க வைக்கிற பாட்டு... 
----------------------------
பஸ் ஹாரன் அடிக்க - மறுபடியும்
என் பயணம் தொடரும் நெய்வேலி, பண்ருட்டினு...  
அணைக்கரை பாலம் பழுதாயிட்டதால பஸ் எல்லாம் மாயவரம் சுத்தி போகுது...
என்ன பன்றது அங்க ஒரு பாலம் ஒடையிற வரைக்கும்!!!
புதுப்பாலம் கட்டமாட்டாங்க...
இப்படி பல பிரச்சனைகள் இருக்கு... 
எல்லாம் முடிஞ்சி காலைல ஊருக்கு போனா?
ஏன்டா இப்படி எளச்சிபோயிருக்கன்னு அப்பா கேப்பாரு - இது பரவால்லங்க 
இப்பதான் ட்ரெயின் விடுறாங்களே பஸுல கூட்டம்லாம் கொரஞ்சிருக்குமே...
வாரம் ஒருதடவை வந்து பாத்துட்டு போலாமேன்னு சொல்லுவாரு...
வாரம் ஒரு தடவையா?
என்ன கொடும சார் இது......





No comments:

Post a Comment