Tuesday, 30 November 2010

வைரம் பாஞ்ச கட்ட...


மறக்கமுடியாத ஆள் - யாரும்
மறுக்கமுடியாத உண்மை...
சபரிமலை செல்வோர் சிலர் - இவரை
சட்டென சொல்லிடுவர்...
ஐயனை தரிசித்து - வரும்வழியில்
பையினை நிரப்புகையில்...
கழுதை பாதை - ஓரம்
கடை விரிச்சு காத்திருப்பார்...
ஹிந்து; மலையாள மனோரமா - என 
நீளும் பத்திரிக்கை விமர்சனங்கள்...
மலைவாழை; காட்டு மஞ்சள் - எனப்பல 
மூலிகைகள் சூழ்ந்திருக்க நடுவிலே வீற்றிருப்பார்...
இந்த ரெண்டு வெதைய எடுத்து
தேனுல கொழச்சி;
பாலோட செத்து குடிச்சா என்று - அவர்
சொல்லும்போதே சுவைக்க தோணும்...
பெரியவர்தானே!!!
கொடுக்கிற காச வாங்கிப்பார்னு மட்டும் நெனக்காதீங்க...
காசு விஷயத்துல ரொம்ப கறாரான பேர்வழி...
பத்துரூபா கொறஞ்சாலும்...
பொயிட்டுவா தம்பின்னு சொல்லிடுவார்...
ஆனாலும் அவர் ஒரு ஆச்சரியமே!!! 
இத்தனை வயசுலயும் - இவர் எப்படி
இவ்வளவு சுறுசுறுப்பா?
இந்த வருஷம் போகும்போது - அவருடன்
ஒரு புகைப்படம் எடுத்துக்கணும்...

Monday, 29 November 2010

செம்மொழி பூங்காவும்... செந்தமிழன் பிழைகளும்...

அமைதி பூங்காவில் ஓர்
அறிவியல் பூங்கா...
திருக்குவளையார் திறந்து வைத்தத்
தமிழ் பூங்கா...
வண்ண வண்ண பூக்கள்...
விதவிதமாய் தாவரங்கள்...
சின்னதாய் ஒரு நீர்வீழ்ச்சி...
சிறிய வாத்துக்கூட்டம்...
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி...
நண்கடர்ந்த மரங்கள்...
நடைபாதை பாலம்...
நடுவே ஒரு கலையரங்கம்...
என பொறியியலில் பொளந்து கட்டிய
நமது வல்லுநர்களை பாராட்டியே ஆகவேண்டும்...
அதே நேரத்தில்...
பிழைகளையும் சொல்லவேண்டிய கடமை எமக்குண்டு...
தாவரங்களின் பெயர் பலகையில்
எழுதியிருக்கும் தமிழ்ப்பெயர்கள் - பல
ஆங்கில சொற்களின் நேரடி மொழிபெயர்ப்பே!!!
ஏன் இந்த பிழையென கேட்க்கும்போது?
கால அவகாசம் காரணமாக சொல்லப்படுகிறது...
சீக்கிரமே அதை சரிசெய்தால் நன்று...
அடுத்தது பொதுமக்கள்.............
எட்டு கோடி செலவு செய்து;
இருபது ஏக்கர் நிலப்பரப்பில்;
அமைந்திருக்கும் அழகிய தாவரவியல் பூங்கா...
அதை நாம் அசுத்தப்படுத்தலாமா?
திறந்து வைத்து ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை...
அதற்குள் பிளாஸ்டிக் பொருட்கள்...
அலட்சியமாக  இல்லாமல் ...
கொஞ்சம் பொறுப்போடு பாதுகாத்தால்!!!
நன்மை நமக்கே - நாம் 
பெருமையோடு சொல்லிக்கொள்ளலாம்...
அமைதிப்பூங்காவில் ஒரு அழகிய பூங்காவென்று...

Saturday, 27 November 2010

புயல் எச்சரிக்கை... வாங்க ஓடுவோம்...


பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...
அரசியல்
ஊடகம்
கேபிள் டிவி 
இப்படி பல திசைகளில் சுற்றி சுழன்றடித்த...
கலைஞர் குடும்பப்புயல் - தற்பொழுது
தமிழ் சினிமாவை தகர்த்து கொண்டிருக்கிறது...
அது மேலும் வலுவடைந்து - கோடம்பாக்கத்தில்
குடிகொள்ளுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சினிமா எடுக்க - யாரும்
வடபழனி பக்கம் வரவேண்டாம் என்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்...
குறிப்பாக!
தயாரிப்பாளர்கள்...
விநியோகஸ்த்தர்கள்... 
திரையரங்க உரிமையாளர்கள்...
நடிகர்கள்; இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள்...
என எல்லோருக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மீறி செல்வோர்!
சன் பிக்சர்ஸ்...
ரெட் ஜியன்ட்...
க்ளவுட் நைன்...
மேனகா மூவீஸ்...
வேதா மூவீஸ்...
முதலிய பெரலைகளுக்குள் - புதைந்து போவீர்கள்
என்று எச்சரிக்கப்படுகிறார்கள்...
இது ஒருபுறமிருக்க...
டப்பிங், எடிட்டிங், கிராபிக்ஸ், DI என்று சொல்லகூடிய
படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைக்கு...
இவர்கள் கொடுப்பதே விலை...
இடைமறித்தால்?
கடைவிரிக்கமுடியாது....
பொழப்பு பிச்சைதான்...
திரையுலக ஜாம்பவான்களே...
கொஞ்சம் பொறுங்கள்
இன்னும் கொஞ்ச நாள்ல
தேர்தல் வரும் - ஆட்சியில
அம்மா வரும் - அடுத்தது இவங்களுக்கு
ஆப்பு வரும்...
என்ன பண்றது வேற வழி...
"பணைமரத்துல பாம்பு இருக்குமேன்னு - பயந்து
தென்னைமரத்துல ஏறினால்...
தேள் கொட்டுது"
அய்யாவ விட்டா அம்மா!!!
அம்மாவ விட்டா அய்யா!!!
என்ன ஒரு பொழப்பு...
வாங்க எல்லாரும் திரும்ப வெவசாயம் பாக்க போவும்...

Thursday, 25 November 2010

வாழ்த்துகள்...

தமிழனின் துயர் துடைக்க - தரணியே 
தயங்கியபோது தனியொரு மனிதனாய்
தூக்கினாய் ஆயுதம்...
தரங்கெட்ட தமிழ்க்குடியில் 
பிறந்திட்ட மாவீரா
உன்னை மறக்குமா பாரதம்...
நாய் பெற்ற தெங்கம்பழம்
என்றொரு பழமொழி தமிழிலுண்டு...
அதுபோலவே...
நாங்களும் பெற்றோம் உன்னை...
உருட்டியே விளையாட முடிந்தது - எங்களால்
உள்ளிருப்பதை அறிய முடியவில்லை...
ஆம்...
அதுவே நடந்தது இந்த தமிழ்நாட்டில்...
தமிழனென்றான் ...
கலைஞனென்றான் ...
முற்றிய பழமென்றான்...
முத்தமிழ் அறிஞரென்றான்...
இந்திய நாடென்றான்...
இறையாண்மை இதுவென்றான் ...
இத்தாலிப்பெண் என்றான்  - இவரே
தலைவியுமென்றான்...
உன்னை ஆதரித்தால் - பொடாவாம்!
தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் - இங்கு
தலைவனாக சில தறுதலைகள் உள்ளனவே...
உன்னுடன் சேர்த்து;
உனை ஈன்ற தமிழ்மன்னையும் வணங்குகிறோம் - இனி
தமிழனாக மட்டும் பிறக்காதே...
தீவிரவாதி என்பான் உன்னை...

முந்தைய தலைமுறை...

நாங்கல்லாம் அந்த காலத்துல...
இப்படித்தான் ஆரம்பிக்கும் எல்லா பெருசும் -வாயில
வெத்தல பாக்கு போட்டுக்கிட்டு... 
என்னதான் சொல்லப்போறாங்கன்னு பாத்தா?
ஓடி ஆடி வெளையாண்டது...
உக்காந்து ஒரம் போட்டது...
கிழிஞ்ச டிராயர் போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போனது...
சிமிலி வெளக்கு வெளிச்சத்தில் படிச்சது...
அண்ணன் தம்பிக்காக விட்டுக்கொடுத்தது...
அடி வயிறு கிள்ளும்போது ஈரத்துணி கட்டினது...
தன் வாழ்க்கையில் நடந்த
நல்லதையும் கேட்டதையும்...
நாம் கேட்க தயாராக இல்லாதபோதும் - சொல்லியே தீரும்...
அப்ப நாம நெனப்போம்!
பெருசுக்கு பொழுதுபோகாம...
நம்மள போட்டு கொல்லுதுன்னு...
ஆனால்................
அந்த புலம்பலுக்குபின்னால் - ஒரு பூப்பாதை உண்டு 
நம் கால்கள் புண்படாமல் போவதற்கு...
சொல்லிய கதைகள் அனைத்துமே - நாம்
சோர்வடையாமல் செல்வதற்கு...
நம் முன்னோர்கள் பட்ட இன்னல்கள் எண்ணி - வாழ்வில்
முன்னேரிப்போவதற்கு...
ஆகவே...
உங்களிடம் 
பெருசுகள் புலம்பினால்?
பெரும்புதையல் நிச்சயம்...
ரெண்டு வார்த்தை பேசிவிட்டுத்தான் போவோமே!!!
கண்டிப்பாக...
நம் தலைமுறையோடு
முடிந்துவிடும் - இந்த
புலம்பலும்; போதனையும்... 
அடுத்த தலைமுறைக்கு சொல்லவும் ஆளில்லை...
நின்று கேட்கவும் நேரமில்லை...

Tuesday, 23 November 2010

வாழப்பழ தோலுரிச்சு... பானையில ஊறவச்சி...

ஜனவரி ஒன்னு - நாப்பத்தி
ஏழு கோடி...
தீபாவளியன்று - தொன்னூறு
கோடி...
ரொம்ப யோசிக்காதீங்க!
இது நம்ம டாஸ்மாக் விற்பனை...
என்ன பண்றது?
கல்யாணம்
காதுகுத்துல ஆரம்பிச்சோம்...
ஆனா இப்ப
காரணமே இல்லாம குடிக்கிறோம் - கேட்டா
கடுப்பா இருக்கு மச்சின்னு வியாக்ஞானம் வேற...
கோடையில் பீரு...
குளிரும்போது ஹாட்டுன்னு...
வெதருக்கு ஏத்தமாறி 
பயபுள்ளைங்க வெளுத்துக்கட்டுதுங்க...
ஒரேயொரு விஷயத்துக்காக
டாஸ்மாக்கை ஆதரிக்கலாம்...
ஏழை பணக்காரன்;
ஆத்திகன் நாத்திகன்;
உயர்ந்தவன் தாழ்ந்தவன்;
எந்த பாகுபாடுமில்லாமல்....
தமிழன் ஒன்றுகூடம் இடமாகி போனதால் - இதுவும்
சமரசம் உலாவுமிடமே....
அதுக்காக இப்படியே விடமுடியுமா?
பூரண மதுவிலக்கு இல்லன்னாலும்...
ஓரளவு
போதிய மதுவிலக்கு வேண்டும்...
என்ன பண்ணலாம்?
ஐடியாக்கள் வரவேற்க்கபடுகின்றன....

Monday, 22 November 2010

ஆடியபாதம்...

அவர்தான் எங்கள்
தமிழ் ஐயா...
தமிழென்னும் சலங்கைகட்டி
தனக்கென்ற பாணியிலே
தரைபடாமல் ஆடியபாதம்...
தேமாவும், புளிமாவும்,
அணி வகையும், 
திருக்குறளும்,
அவைபொருளும்...
திகட்டாமல் விருந்தளிப்பார் - கணீர்குரலில்...
ஐம்பெரும் காப்பியம்,
அகநானூறு, புறநானூறு
எட்டுத்தொகை, பத்துபாட்டென...
தலையில்
தட்டியே சொல்லித்தருவார் - அந்த
தடித்த மீசைக்காரர்...
நேர்கொண்ட பார்வையும்,
நிமிர்ந்த நடையும்,
முறுக்கிய மீசையும் - நன்கு
மழித்த கன்னமும்...
ஓங்கிய குரலும்
வெள்ளை உடையும்
எப்போதும் எளிமையுமென - அப்படியே
மனதில் நின்றார்...
அவர் நடத்திய பாடம்போல.
எப்போதுமே ஹீரோதான் அவர்...
விடைத்தாள் தருகையில் மட்டும் வில்லனாக காட்சிதருவார்...
இவரும் சராசரி என்றே நினைத்துவிட்டேன் - சிறுவன்தானே நான்.
எட்டாம் வகுப்பு படிக்கையிலே
தமிழ் மன்றத்தேர்வு...
காய்ச்சல் எனக்கு - இது தேர்வு காய்ச்சலல்ல...
எல்லோரும் வந்திருக்க - என்னை தேடியவர்
தன் மிதிவண்டி தந்து
என் நண்பனை அனுப்பிவிட்டார் வீட்டிற்கே...
ஐயாவே ஆளனுப்ப
புறப்பட்டேன் பரிட்ச்சைக்கு...
எழுதவும் செய்தேன் - அவருடைய பேனாவிலேயே...
எத்தணை பேருக்கு கிடைக்குமோ அந்த வாய்ப்பு?
என்னை பொறுத்தவரை அது வாய்ப்பல்ல - வரமே!!!
வருடங்கள் ஓடின...
வயதும் ஆனது...
காலத்தின் கட்டளை - அம்மாமனிதனை
மீண்டும் சந்திக்க...
பேருந்திலே பார்த்தேன்
ஐயா நலமா என்றேன்?
சற்று நெருங்கிவந்தே இணம்கண்டார் - நான்தான் என்று
ஏ... சோழியவிளாகத்து கெடா...
இப்படித்தான் எனை அழைப்பார் - மகிழ்ச்சியில் இருக்கையிலே...
இன்றோ...
மங்கிய பார்வை...
தொங்கிய தோள்கள்...
குன்றிய குரல் என வயோதிகனாய் காட்சிதந்தது - என் தமிழ்...
அப்போதுதான் சொல்லநினைத்தேன்
"வணக்கம் ஐயா..."என்று
பள்ளியில் எழுந்து நின்று சொன்னதுபோல...
--------------------------------------------------------------
உனக்கல்லவா சொல்லவேண்டும்
என் முதல் வணக்கம்...
இந்த காட்டானையும் கிறுக்கவைத்த - தமிழ்க்
கடவுளல்லவா நீ எனக்கு...
உன் பொர்ப்பாத கமலங்களில் - என்
படைப்புகளை சமர்ப்பிக்கிறேன்...

Friday, 19 November 2010

NH.45... ஒரு பயணம்...

எப்ப ஊருக்கு கெளம்பினாலும்  
நம்ம பொழப்பு நாரிதாங்க போகும்...
கோயம்பேட்டுல பஸ் புடிக்கிறதுகுள்ளேயே
குற்றுயிரும் குலையுயிருமா ஆயிடுவோம்...
மிச்ச உயிர் எதுவரைக்கும்னு கேளுங்க?
மறைமலைநகர் தாண்டும்வரை தாங்கும்...
அப்பறம் அப்பன் ஆத்தா பண்ண புன்னியத்துல அப்படியே போகுமுங்க...
டிராபிக் ஜாம், கூட்டநெரிசல், கசகசப்பு இதுக்கெடையில வீட்டுலேந்து போன் - எப்பவருவ?
சரி ஜனநாயக நாட்டுல இதெல்லாம் சகஜமுன்னு பாத்தா...
பக்கத்ல இருக்குறவன் கொரியன் செட்டுல - அப்பதான் 
கேர்ள் பிரண்டுகிட்ட லவுடு ஸ்பீக்கர்ல பேசுவான்...
ஒரு மனுஷனோட பொறுமைய இதுக்குமேல சோதிக்க முடியாது...
ஒட்டுமொத்த பிரச்னையும் சமாளிக்க - வோட்கா 
ரெண்டு ரவுண்டு தேவைப்படும்...
எப்படா எறக்கிவிடுவீங்கன்னு யோசிக்கும்போது - ஓரங்கட்டுவாங்க 
விக்கிரவாண்டியில...
அந்த ஹோட்டல்ல அப்ப போடுவாங்க பாருங்க பாட்டு..... அடடா 
------------------------
"ஏ பையா குடிகாரா சாராயத்த குடிக்காதடா...
சாரயத்த குடிச்சிபுட்டு கொடலு வெந்து சாகாதடா...  
அன்டா குன்டா அடகு வச்சி சாராயத்த குடிக்கிறியே...
அதுவும் இல்லையின்னா பொண்டாட்டிய அடிக்கிறியே..." (ஏ பையா) 
-----------------------------
இன்னொன்னு இருக்கு கேளுங்க அதுதான் நம்ம பாட்டு...  
"அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மக எழுதும் கடிதம்...
ஏதோ நானும் இருக்கிறேன்... உருப்படியா படிக்கிறேன்...
யாருமில்ல நமக்கு - நீ எப்படிருகன்னு நெனைக்கிறேன்...
பள்ளிகொடம் செக்கனுன்னு பாத்திரத்த வித்திங்களே?
அம்மா... எந்த பானையில் சமைக்கிறேன்னு எழுதுறேன்...
புத்தக நோட்டு வாங்கா பணம் அனுப்புறேன்னு சொன்னிங்களே?
அம்மா... பாத்திரம் தேச்ச வீட்டுல இன்னும் பணம் கொடுக்கலையா?
புத்தக நோட்டு வாங்கலன்னு வாத்தியார் தினமும் அடிக்கிறார்...
வாங்கிகொடுத்த பேனாவும் ஒடஞ்சி எரவ வாங்கி எழுதுறேன்..."
யோசிக்க வைக்கிற பாட்டு... 
----------------------------
பஸ் ஹாரன் அடிக்க - மறுபடியும்
என் பயணம் தொடரும் நெய்வேலி, பண்ருட்டினு...  
அணைக்கரை பாலம் பழுதாயிட்டதால பஸ் எல்லாம் மாயவரம் சுத்தி போகுது...
என்ன பன்றது அங்க ஒரு பாலம் ஒடையிற வரைக்கும்!!!
புதுப்பாலம் கட்டமாட்டாங்க...
இப்படி பல பிரச்சனைகள் இருக்கு... 
எல்லாம் முடிஞ்சி காலைல ஊருக்கு போனா?
ஏன்டா இப்படி எளச்சிபோயிருக்கன்னு அப்பா கேப்பாரு - இது பரவால்லங்க 
இப்பதான் ட்ரெயின் விடுறாங்களே பஸுல கூட்டம்லாம் கொரஞ்சிருக்குமே...
வாரம் ஒருதடவை வந்து பாத்துட்டு போலாமேன்னு சொல்லுவாரு...
வாரம் ஒரு தடவையா?
என்ன கொடும சார் இது......





போற்றுதலும் தூற்றுதலும் கூட - இங்கே போதிமரங்கள் தான்...

விமர்சனங்கள் - அரசியல், கலை, விளையாட்டு
இவைகளுக்கு மட்டும் உரித்தானதல்ல...
சாமானியனுக்கும் அது சரியானதே...
எந்த ஒரு செயலை
செய்தாலும் அதில் தனித்துவம் காட்டுவதே - நம்
அனைவரின் அவா!!!  
இறுதியாக அச்செயலை
யாராவது பாராட்டிவிட்டால் - முத்தாய்ப்பு...
நல்ல விஷயங்கள் பாராட்டுக்குரியவை...
ஆனால்
நம்மில் யாரும் அதை செய்வதில்லை.
பிஞ்சுக்குழந்தை முதல் - உயிர்ப் 
பிரியப்போகும் கிழவன் வரை...
அனைவருமே பாராட்டுக்காக ஏங்குகிறோம்.
ஆயிரம்தான் இருந்தாலும்;
அடிமனதில் ஒரு ஏக்கம்...
யாரும் கண்டுகொள்ளவில்லை என்றால்.
செல்லும் பாதை சரியென சொல்ல... 
தவறி செல்கையில் திசையைக்காட்ட...
தேவை நமக்கு விமர்சனங்கள்!!!
விமர்சிப்போம்...
விவாதிப்போம்...
வாழ்க வளமுடன்...

Thursday, 18 November 2010

தப்பு பண்ணாம இருக்கனும்னா... நான் சொல்றத கேளுங்க...

தலைப்ப பாத்த உடனே
நீயென்ன அவளோ பெரிய அளான்னு கேக்குறீங்களா?
இருங்க நானே விளக்கமும் சொல்றேன்...
"தவறு என்பது தவறி செய்வது...
தப்பு என்பது தெரிந்து செய்வது" - கண்ணதாசன்.
இதில எனக்கு உடன்பாடு இல்லிங்க...
இங்க யாருமே எதையுமே தவறி செய்வதில்ல!!!
அறியாமை,
அறிய முற்படாமை,
அலட்சியம் - எல்லாத்துக்கும் மேல  
செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள தயக்கம்...
அதனால எல்லோரும் சொல்வது தெரியாம செஞ்சிட்டேன்...
நானும் சொல்லிருக்கேன் - வேக்கப்படுறேன்!!!
எதுக்காக கண்ணதாசன் 
அப்படி சொன்னாருன்னு யோசிச்சா?
அடுத்து வரியில இருக்கு பதில்
"தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்...
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்..." .
என்ன ஒரு ஆளுமை - அவர் எழுத்தில்!!!
சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்...
நம்ம வயசு கோளாறா?
இல்ல புத்தி கோளாறான்னு தெரியலங்க?
எதையாவது செய்யாதன்னு யாராவது சொன்னா?
அதை உடனே செய்ய சொல்லுது...
சிகரட் புடிக்காத...
தண்ணி அடிக்காத...
பொண்ணுங்க பின்னாடி சுத்தாத...
இன்னும் நெறையா இருக்கு - அதெல்லாம்
சென்சார் பண்ணியாச்சு...
இதெல்லாம் போயி என்கிட்டே சொல்லலாமா?
நா என்ன பண்ணியிருப்பேன்னு எல்லாராலும் யூகிக்க முடியும்...
நீங்க நெனச்சது சரிதான்.

தப்பு பண்ணிக்கிட்டேதான் இருந்தேன் - நேத்துவரை...

மேல சொன்ன தவறுகள் எதையுமே
நா இப்ப செய்யிறதில்ல!!!
எப்படி இது சாத்தியம்?
ஒரு மானுடன் மகானாக காரணம் என்ன?
யாராலும் யூகிக்க முடியாது!!!
நானே சொல்றேன்...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சபரிமலைக்கு மாலை போடபோறேன்...
நீங்களும் போடுங்க - கொஞ்ச நாளைக்கு நல்லவனா இருப்போம்...
சாமியே சரணம் ஐய்யப்பா....

Wednesday, 17 November 2010

When terrorism is instant... Why not justice be so....

போன வாரம்
மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன் - போலீசாரால்
சுட்டுக்கொல்லப்பட்டான்...
யார் இந்த மோகன்ராஜ்; நண்பனுடன் சேர்ந்து...
வாழவேண்டிய இரு பிஞ்சு மலர்களை
நாசமாக்கிய படுபாதகன்...
மேலிடத்து பிரஷரோ?
அரசின் மறைமுக ஆணையோ - அதெல்லாம் தெரியாது
நவம்பர் ஒன்பது...
காலை ஐந்து முப்பது... மோகனாசுரன் - கொல்லப்பட்டான்
கோவையில் அன்றுதான் தீபாவளி...
ஊர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட!
ஆரம்பித்தது தலைவலி - போலீசுக்கு.
வேற யாரு... நம்ம
தேசிய மனித உரிமை கழகமும்,
மகாகனம் பொருந்திய சில மனிதநேயமிக்க மான்பாளர்களும் தான்...
அவங்க கேள்விகள் என்னன்னா?
நீதிமன்றமும், சட்டமும் இருக்கும்போது;
எப்படி நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை சுட்டுக்கொள்ளலாம்? 
இன்னும் சிலபேர் கேக்குராங்க...
கண்ணுல பட்டவன எல்லாம் கன்னா பின்னான்னு சுட்ட 
தீவிரவாதி அஜ்மல் கசாபையே நாம பொறுமையா இன்னும் விசாரிக்கும்போது...
ரெண்டு கொலை, ஒரு கற்பழிப்பு பண்ண மோகன்ராஜ ஏன் சுட்டாங்க?
...........................................
சட்டத்துல இருக்கிற ஓட்டைதான்
நம்ம சட்டசபையை விட பெருசா இருக்கே...
அப்பறம் எங்கிருந்து நீங்க நீதிமன்றத்துல வழக்கு நடத்தி...
தண்டனை குடுத்து...
அவன் திருந்தி - நடக்குமா இதெல்லாம்...
அது எப்படி?
என்கவுன்ட்டர் பண்ணும்போது மட்டும் மனித உரிமை கழகம் கேள்வி கேக்குது...  
தமிழ்நாட்டுல ஒவ்வொரு நாளும்
மனித உரிமைகள் பறிக்கபடுவது உங்களுக்கு தெரியலையா?
இல்ல கண்ண மூடிபிங்களா? 
கசாப பத்தி பேசுறீங்களே...
உங்க நெருங்கிய சொந்தக்காரன் எவனையாவது
கசாப் சுட்டிருந்தா...
இப்ப விசாரிக்கிற முறை சரின்னு சொல்லுவீங்களா?
யாராவது விளக்கம் சொல்லுங்கள் - இந்த
விளங்காதவனுக்கு...

Tuesday, 16 November 2010

கனவு மெய்ப்படவேண்டும்...

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும்
அடிப்படை வசதிகள்...
அனைவருக்கும் கல்வி...
நாட்டிலுள்ள அனைவருக்கும் தங்கள் உரிமைகளும்,
கடமைகளும் போதிக்கபடவேண்டும்... 
வறுமை ஒழிய வேண்டும்...
அரசின் திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கவேண்டும்...
வேலைவாய்ப்பு அந்தந்த மாவட்ட, மாநிலங்களிலேயே கிடைக்கவேண்டும்...
கிராமத்தில் இருப்பவனுக்கும் இன்றைய தொழில்நுட்பம் பயன்படவேண்டும்...
வேறென்ன?
மக்கள் குறைகேட்டு அதை தீர்க்கும் அரசு...
ஊழலில்லா அதிகாரிகள்...
கல்வியை காசுக்கு விற்காமல்; அறிவு புகட்டும் கல்லூரிகள்...
லஞ்சம் வாங்கா அரசு அலுவலகங்கள்...
மக்கள் தொகையை மனதில் வைத்து; நாம் இருவர் நமக்கு ஒருவர் திட்டம்...
இனியும் நஞ்சை, புஞ்சையை
பிளாட் போட்டு விற்காத ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்...
இருக்கின்ற நிலத்திலாவது
விவசாயம் செய்து;
எதிர்கால சந்ததியற்கு இப்படி ஒரு தொழில் இருந்ததை சொல்ல காணி நிலம்...
யாருக்கு என்ன ஆனா என்ன; நமக்கு வரும்போது பாத்துக்கலாம்
என்று எண்ணாத மனம்...
திட்டமிட்டு;
வழிவகுத்து;
செயல்படுத்துகிற...
சோம்பேறித்தனம் இல்லாத...
உழைப்பை நம்பும் குடிமகன்களை கொண்ட நாடு...
இதுதான் என் கனவு இந்தியா...

மழை... அம்மா... அப்பா... கெழவி...

இசையருவி
காதில் பாய...
இணக்கமாய்

காதல் கணவோடு...
உறக்கத்தில் இருந்த என்னை...
எழுப்பியது ஒரு விளம்பரம் - இரக்கமே இல்லாமல்...
கண் விழித்து பார்த்தபோது

கனமழை...
என்ன ஒரு ஆச்சரியம்
!!!
செய்திகளில் ரமணன் சொன்ன பிறகும்

மழையா என்று?
மகிழ்ச்சியோடு தந்தியை புரட்ட...
மனசுக்குள் ஞாபகங்கள்
பந்திவைத்தது...
ச்ச எவ்வளவு நாளாச்சு?
எப்படா ஸ்கூல் பெல் அடிபாங்கன்னு காத்திருந்து...
பெல் சத்தம் முடியும் முன்பே;
மூன்று கிலோமீட்டர் தாண்டி ஓடி...
ஆலங்கட்டி மழையில அடிவாங்கிக்கிட்டே ஐஸ் பொருக்கி...
நனைஞ்சிகிட்டே வீட்டுக்குள் போனா...
அடுப்படியில் இருந்து அம்மாவின் குரல்...
எங்கயாவது இது அடுக்குமா - செத்த நின்னு வந்தாதான் என்னா?
திட்டிகிட்டே துவட்டுவாங்க தன் செலையாள...
நல்ல வேலை அப்பா வயலுக்கு போயிருப்பார்...
அடுத்தது பொறி அரிசி, பக்கோடா, சூடா டீ...
எல்லா வாயும் ஒரே பிசி
எப்போதுமே மந்தமா கேக்குற கெழவி காது;
அப்பமட்டும் கரெக்டா கேக்கும்...
ஏ... தாஸு...
கொல்லையில சத்தம் கேக்குது தேங்கா உழுந்திருக்கும் போய் எடுத்துட்டு வா...
என்ன ஒரு கொலைவெறின்னு கெழவிய திட்டிகிட்டே போய் பாத்தா;
தேங்கா மட்டுமா...
அவித்தி கீற மரம்
அடியோட சாஞ்சிருக்கு - போச்சுடா
இனிமே ரெண்டு மூணு நாளைக்கு தன்னிசாறுதான்...
திண்ணையில உக்காந்து
ஆயாகூட தாயம்...
சுடசுட சோறு...

மொச்சக்கொட்ட கொழம்பு...
எல்லாத்துக்கும் மேல - எப்பவுமே
கோவமா இருக்குற அப்பா அப்பமட்டும் சந்தோஷமா!!!
கடைசியா தூக்கம் - அம்மா புடவைய போத்திகிட்டு....
என்ன ஒரு வாழ்கை...
பொலம்பிகிட்டே கெளம்பிட்டேன் - வேளைக்கு...
அப்பதான் மகேஷ்பாபு அண்ணா சொன்னது ஞாபகம் வந்தது...
"முன்பெல்லாம் வாழ்வதற்காக வேளைக்கு சென்றோம், இன்று வேளைக்கு போவதற்காக வாழ்கிறோம்."
மீண்டும் சந்திப்போம்...





Monday, 15 November 2010

ராசாவே உன்னை நம்பி இந்த டெலிகாம் இருக்குதுங்க...

நானும் கொஞ்ச நாளா பாத்துகிட்டுதான் இருக்கேன்...
ஆயிரம் ருபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.டீ.ஓ. பிடிபட்டார்,
ஐநூறு ருபாய் லஞ்சம் வாங்கிய வீ. ஏ. ஓ. பிடிபட்டார்,
பத்தாயிரம் வாங்கிய சப் - இன்ஸ்பெக்டர் பிடிபட்டார்,
இவ்வளவு ஏன்?
...கலர் டீ.வி வாங்கும்போது லஞ்ச ஒழிப்புதுறை ஆய்வாளர் பிடிபட்டார்னு.....
உடனுக்குடன் செயல்பட்டீங்க...
சுமார் ஒன்றரை லட்சம் கோடி ஊழல் பண்ண நம்
ராசா விஷயத்துல இப்பதான் உங்க கவனம் போகுதா....
கருணாஸ் சொல்றமாரி
இதுதான் இங்க டக்கா...
இத செயிரதுக்கு
உச்சநீதிமன்றத்துலேந்து காரிதுப்பி...
எதிர்கட்சிகள் கழட்டி அடிச்சி...
மீடியாக்கள் ஓடியாந்து உங்கள கொடைஞ்சாதான்...
லேசா அசையிரிங்க...
பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க?
சம்மந்தபட்டவர், "எல்லாமே பிரதம மந்திரியின் மேற்பார்வையில் தான் நடந்தது"னு சொல்றாரு...
எவன் எத்தணை கோடி அடிச்சா நமக்கு என்ன...
இந்த இன்னிங்க்ஸ்ல சச்சின் பதிமூணு ரன்னுல அவுட் மச்சான்னு
சொல்லி நம்ம பசங்க பீர் பாட்டில ஓபன் பன்னிட்டானுங்க...
சரிதான் போ கெடக்குன்னு - நானும்
சரக்க அடிச்சிட்டு சவுங்கை ஆயிட்டேன் - வழக்கம்போல...
பாரத சமுதாயம் வாழ்கவே!!!
வாழ்க வாழ்க...
பாரத சமுதாயம் வாழ்கவே!!!

Saturday, 13 November 2010

சோழியவிளாகத்தான் மாயவரம் போனா?
கிராமத்லேந்து இங்க எங்கடா வந்திங்கன்னு...
வாயிலேயே குத்துரானுங்க...
சரி இங்கதான் இப்படினு பாத்தா!!!
மாயவரத்தான் மெட்ராஸ் போனா?
அடிங்கோ... ஊருநாட்டுலேந்து பொழைக்க வந்துட்டு
என்னடா உங்களுக்கு நக்கல்னு?
கொமட்லையே குத்துரானுங்க...
சரி இங்கதான் இப்படினு பாத்தா!!!
மெட்ராஸ்காரன் பெங்களூர் போனா?
தமிழனா நீ...
உனக்கு குடிக்க தண்ணிகூட கெடயாது
திகா முச்கொண்டு ஓகோன்னு ...
சூ...லையே ஒதைக்கிரானுங்க...
சரி இங்கதான் இப்படினு பாத்தா!!!
தென் மாநிலத்லேந்து எவனாவது
பாம்பே பக்கம் போனா?
து மதராசி? ஹே சாலா...
ஓடுங்கடா உங்க ஊருக்குனு வேரட்டுறான்...
சரி இங்கதான் இப்படின்னு
வெளிநாட்டுக்கு போனா...
ஆஸ்திரேலியாவுல அடையாளம் தெரியாத அளவுக்கு அடிக்கிறான்...
மலேசியாவுல கொன்னு எரிச்சு இருந்த தடமே இல்லாம ஆக்கிடுறான்...
இங்கிருந்து எல்லாத்தையும் சொரண்டிட்டு போன
இங்கிலாந்துக்கு போனா - இங்க எங்கடா வந்திங்க திருட்டு பசங்கலானு ஒதைகிறான்...
பத்தாததுக்கு எங்கெல்லாம் ஜெயில் இருக்கோ அங்கெல்லாம் நம்மாளு இருக்கான்...
இவ்வளவு ஏங்க...
இருபது கிலோமீட்டர் அந்தபக்கம் போயி நிம்மதியா
மீன் பிடிக்க முடியலிங்க...
சுட்டு புடுரானுங்க காக்கா குருவி மாதிரி.
இவ்வளவு பிரச்சனைகளை பார்த்த பின்பு... முடிவு பண்ணிட்டேன்
வீட்டு பக்கத்ல இருக்கிற டாஸ்மாக்ல - ஒரு அக்கௌன்ட்
ஒப்பன் பண்ணலாம்னு...
டெய்லி குடிக்கனும்ல - எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப்பண்ண மாட்டோமா...