போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாறி தூற்றுவார் தூற்றட்டும்... ஏற்றதொரு கருத்தென எமதுள்ளம் கண்டால்!!! எடுத்துரைப்போம்... எவர் வறினும்; நில்லோம்... அஞ்சோம்...
Monday, 10 January 2011
The Real Culprit.....
எய்தவனை விடுத்து
அம்பை குறை சொல்வது
எவ்வகையில் ஞாயம்?
உண்டு; கழித்து பின் மஞ்சத்தில்
உறவாடும் ஒருவனை
கடவுள் என்கிறார்கள்...
அறுசுவையில் ஒருசுவையை
அவளுக்கு காண்பித்தான்...
இது எங்கும் நடக்காததா?
சும்மா இருந்தவனை
சுற்றி வந்து
சிவனாக்கிய மக்களை விடுத்து...
சிவலிங்க அமைப்பிற்கு
செய்முறை விளக்கம்
சொன்னவனை தண்டிப்பதா?
அடித்தோம் உடைத்தோம்
அவனை அல்ல
திருப்பி அடிக்காதவற்றை
சிறைக்குள் சென்றவன் - இன்று
சிரித்துக்கொண்டே வருகிறான்
சிறு துரும்பும் நெருங்காத பாதுகாப்போடு...
முட்டாளாய் நாம் இருந்தால்
முறைதவறி பிறந்தோரெல்லாம்
முதல்வராக கூட வளம் வருவர்...
Subscribe to:
Post Comments (Atom)
என்னை படைத்த கடவுளை நான் அணுகுவதற்க்கு மற்றவர் சிபாரிசு வேண்டும் என்றும் நம்புவதாலும், இந்த இந்த மனிதர்களிடம் இறைத்தன்மை உள்ளது என்று மனிதர்களை மக்கள் நம்புவதாலும் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. என்னை படைத்த கடவுளுக்கு என்னை அறிமுகப் படுத்த யாரும் தேவையில்லை, இறைதன்மை மனிதனிடம் எப்படி வரும்? ஏனெனில் அவனும் மலம், ஜலம் சுமப்பவனாயிற்றே,இன்று உலகில் ஆன்மீகத்தை நமக்கு சொல்பவர்களிடம்தான் பணம் கோடிக்கணக்கில் வந்து சேர்கிறது, உலகில் முற்றும் துறந்தவர்களுக்கு எதற்கு உலக செளகர்யங்கள், வள்ளலார், திருமூலர் மற்றும் புராணங்களில் சொல்லப்படுபவைகளை யாரும் இன்று நடைமுறை படுத்துவதில்லை. மனிதன் சிந்திக்க தவறுவதால்தான் சமுதாயத்தில் இது போல் கொள்ளிக்கட்டைகள்.
ReplyDeleteஅருமையான விளக்கம்...
ReplyDelete