போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாறி தூற்றுவார் தூற்றட்டும்... ஏற்றதொரு கருத்தென எமதுள்ளம் கண்டால்!!! எடுத்துரைப்போம்... எவர் வறினும்; நில்லோம்... அஞ்சோம்...
Tuesday, 18 January 2011
விதவைப் பொங்கல் 2011...
காதல் மயக்கத்தில்
கதவருகே நான் நின்றால்...
காதோரம் சொல்வாயே
கவிதைகள் கண்ணாளா...
இச்சை எதுவென்று
எதை பார்த்து உணர்வாயோ...
இழுத்து அணைப்பாயே
இன்பம் தருவாயே...
போனால் ஒன்று...
வந்தால் ஒன்று...
நின்றால் ஒன்று...
நடந்தால் ஒன்றென்று...
நித்தமும்
உறைந்திடுமே...
என் சித்தம்
உன் முத்தத்தால்...
பித்தம் தலைக்கேற
பிதற்றும் எனையனைத்து
மொத்தமும் தருவாயே
மூச்சிரைக்க மணவாளா...
இதற்காக இத்தனைநாள்
ஏங்கியதை நான் சொன்னால்
இதற்கே நான் பிறந்தேன்
என்பாயே என் கனவா...
கட்டிய தாலியில்
இன்னும் கலர் சாயம்
போகலையே...
கட்டிய நீ ஏன் போன?
எவ்வளவோ
சொன்னேனே
இந்த வருஷம்
வேணாமுன்னு...
புள்மேடு பாதையில
திரும்பி வந்தா - வீட்டுக்கு
சீக்கிரம் வரலாமுன்னு
வந்தியா?
பேப்பர்ல உன் பெற
பாத்ததுமே...
போயிடிச்சே என்
உசுரு...
அதிர்ச்சியில கருச்சிதைவு
ஆச்சுதின்னு
சொல்லையில
நின்னே போயிடிச்சு முச்சு...
கிழிஞ்ச
துனியா
ஆயிடிச்சே
என் வாழ்க்கை...
நான் யாரை
குத்தம் சொல்ல?
எங்க போயி
முறையிட?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment