Thursday, 2 June 2011

அஞ்சலி...


அடிமை வம்சத்திலோர்
அசாகாய வீரன் பிறந்து!
அனைவரையும் மீட்டெடுத்தால்
அளவில்லா ஆனந்தம் கொள்கிறோம்...

...கொடுமைக்கு எதிராய் - மக்கள்
கூடி வந்து போராடி!
விடுதலை அடைகையில்
வாய் பிளந்து பார்க்கிறோம்...

எகிப்து, லிபியா என
எங்கு நடந்தாலும் - நம்
ஏகோபித்த ஆதரவை
இங்கிருந்தே தருகிறோம்...

இலங்கையில் நடந்ததே - ஓர்
இனப்படுகொலை!
அது என்ன வகையென்று
அனைவரும் அமைதிகாத்தோம்?

பார்த்தோம்!
பதபதைத்தோம்!!
பக்கம் பக்கமாய் எழுதினோம் - ஆனால்
போராட தயங்குவதேன்?

அகமும் புறமும் - உலகுக்கு
அளந்து சொன்னவன் தமிழன்...
அழுவதைத் தவிர - இன்று
அவனுக்கேதும் தெரியவில்லையோ?

ஆழ்கடலில் ஏதுமின்றி
தத்தளிக்கும் ஒருவனுக்கு...
வாழ்வளிக்க வந்த துடுப்பே - நமக்கு
இந்த ஐநா குழு அறிக்கை...

இனியும் ஏன் மௌனம்?
போராட கூட வேண்டாம்...
அமைதியாய் நம் உணர்வை
உலகுக்கு எடுத்துரைப்போம்...

இலங்கையில் இணப்
படுகொலை செய்யப்பட்ட
1,46,000 தமிழர்களுக்காக
அமைதியாய் - ஓர் அஞ்சலி...

தமிழர்கள் அனைவரும்
தவறாது கலந்துகொள்ள
வேண்டுமென்று...
தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...

இடம்: மெரீனா கடற்கரை.
நாள்: 26 சூன் 2011.
நேரம்: மாலை 6 மணி.
ஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்...


No comments:

Post a Comment