தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பமிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து
நறை கூடி கிழப் பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையென பின் - மாயும்
பல வேடிக்கை மனிதரை போல் நான்
பல வேடிக்கை மனிதரை போல் நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ !!!
இனி என்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோசம் கொண்டிருக்கச்செய்வாய்...
இனி என்னை புதிய உயிராக்கி
மதிதன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோசம் கொண்டிருக்கச்செய்வாய்...
- சுப்ரமணிய பாரதி.
No comments:
Post a Comment